உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரிகோவிலில் சிறப்பு பூஜை

கன்னிகா பரமேஸ்வரிகோவிலில் சிறப்பு பூஜை

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி சந்தன காப்பு அலங்காரமும், குத்துவிளக்கு பூஜையும் நடந்தது. காலை 7 மணிக்கு 17 வகையான அபிஷேகங்களும், இரவு 7 மணிக்கு சகஸ்ர நாம குங்கும அர்ச்சனையும், சந்தன காப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும் கணேஷ் சர்மா செய்து வைத்தார். உபயதாரர்களுக்கு நிர்வாக தலைவர் கோவிந்தசாமி பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !