காளியம்மன் கோவிலில் அக்னி குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :1274 days ago
சேலம், மணியனுார் காளியம்மன் கோவில் சித்திரை பண்டிகையில், ஏராளமான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
சேலம், மணியனுார் காளியம்மன் கோவில் சித்திரை பண்டிகை, கடந்த, 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் நேற்று(28ம் தேதி) குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார். நாளை 29ல் சத்தாபரணம், 30ல் மஞ்சள் நீராட்டு விழா, மே, 1ல், கும்ப பூஜை, 2ல் ஊஞ்சல் உற்சவம் நடக்க உள்ளது.