நவகிரக கோட்டையில் அமாவாசை வழிபாடு : பக்தர்கள் தரிசனம்
ADDED :1519 days ago
பல்லடம்: பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில் அமாவாசை வழிபாடு நடந்தது.
சித்திரை மாத அமாவாசை நாளான இன்று சித்தம்பலம் நவகிரக கோட்டையில், அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. நோய் நொடிகள் நீங்கவும், உலக நன்மை பெறவும் வேண்டி மகா மிருத்தியுஞ்ஜய வேள்வி நடந்தது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று சிறப்பு வேள்வி வழிபாட்டை நடத்தி அருளாசி வழங்கினார். வேள்வியின்போது பூஜிக்கப்பட்ட, 108 தீர்த்த கலசங்களை எடுத்து வந்த பக்தர்கள், நவக்கிரகங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து, விநாயகர், நவகிரகங்கள், நந்தி, மற்றும் சிவபெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.