சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :1260 days ago
விருத்தாசலம் : சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 12ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் காலை அபிஷேக ஆராதனை, இரவு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.நேற்று (29ம் தேதி) தீமிதி திருவிழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 10:00 மணிக்கு அரவாண் களபலி நடந்தது. தீமிதி திருவிழா மாலை 4:00 மணிக்கு நடந்தது. ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தீ மிதித்த சில பக்தர்கள், பூசாரிகளிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், மாலை 5:00 மணியளவில் கொடியிறக்கத்துடன் விழா முடிகிறது.