உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபாளையம் சக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

ராசிபாளையம் சக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

சூலூர்: ராசிபாளையம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, பெண்கள் பால் குடம் எடுத்து வந்தனர்.

சூலூர் அடுத்த ராசிபாளையத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, கடந்த, ஏப்., 26 ம்தேதி இரவு பொரி மாற்றுதலுடன் திருவிழா துவங்கியது. இரவு, 8 :00 மணிக்கு, கம்பம் நடப்பட்டது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். நேற்று விநாயகர் கோவில் இருந்து பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். நாளை இரவு, 10:00 மணிக்கு அம்மை அழைத்தலும், 4 ம்தேதி காலை, மாவிளக்கு பூஜை மற்றும் பொங்கல் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். சித்திரை அமாவாசை பூஜை: சித்திரை அமாவாசையை ஒட்டி, சூலூர் மேற்கு அங்காளம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !