மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
1250 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
1250 days ago
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு சக்தி கரக ஊர்வலம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு அம்மாவாசையன்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மாசி மாதத்தில் மாசி பெருவிழா நடைபெறும் போதும், சித்திரை மாதத்தில் சக்தி கரக ஊர்வலம் நடக்கும் போதும் ஊஞ்சல் உற்சவம் நடப்பது இல்லை. இதன் படி நேற்று முன்தினம் சித்திரை அமாவாசையை சக்திகரக ஊர்வலம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்தனர். இரவு 1 மணிக்கு அக்கினி குளத்தில் இருந்து சக்திகரகம் ஜோடித்து மேல்மலையனூர் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலம் நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். அதிகாலை 5 மணிக்கு கோவிலுக்கு வந்த சக்திகரகத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழானை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கினர். இந்துசமய அறநிலையத்துறையினர், அரங்காவலர்கள், கோவில் பூசாரிகள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.
1250 days ago
1250 days ago