உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அட்சய திருதியை குபேரர் வழிபாடு

அட்சய திருதியை குபேரர் வழிபாடு

காஞ்சிபுரம் : அட்சய திருதியையையொட்டி, காஞ்சிபுரம் சுரகரேஸ்வரர் கோவிலில், நாளை குபேரர் வழிபாடு நடக்கிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், சுரகரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மூலவர் உள்ள கருவறைக்கு முன் ஐந்தடி உயரத்தில் குபேரர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். காஞ்சியில் முதன் முதலில், குபேரனுக்கு தனி சிலை இங்கு மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. அட்சய திருதியை அன்று, குபேரனை வழிபட்டால், செல்வ செழிப்பிற்கு வழிவகுக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.இதனால், ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று குபேரனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி அட்சய திருதியை தினமான நாளை, இக்கோவிலில் குபேரர் அட்சய திருதியை வழிபாடு நடக்கிறது.காலை 7:00 மணிக்கு கூட்டு வழிபாடு சங்கல்பம் மற்றும் சிறப்பு அபிேஷகமும், காலை 9:00 மணிக்கு மஹாதீப ஆராதனையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !