உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக ராகவேந்தர் கோவிலில் கூட்டு பாராயணம்

உலக நன்மைக்காக ராகவேந்தர் கோவிலில் கூட்டு பாராயணம்

மேட்டுப்பாளையம்: உலக மக்கள் நன்மைக்காக, காரமடையில் உள்ள, ராகவேந்திரர் கோவிலில், சிறப்பு கூட்டு பாராயணம் நடந்தது.

காரமடையில் ஜெயமாருதி, ராகவேந்திரர் கோவில் உள்ளது. இங்கு உலக மக்கள் நன்மைக்காக, குரு ஸ்தோத்ர சிறப்பு கூட்டு பாராயணம் நடந்தது. இந்த கூட்டு பாராயணம் காலை, 7:00 மணிக்கு துவங்கி, இரவு, 7:00 மணி வரை, நான்கு குழுக்கள் நடத்தினர். இதில் ஜாதி, மத இன வேறுபாடின்றி அனைத்து பக்தர்களும் பங்கேற்றனர். திருநெல்வேலி கொண்டாநகரம் சுப்பிரமணியம் கூட்டுப் பாராயணத்தை நடத்திக் கொடுத்தார். இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய ஊர்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஜெய மாருதி ராகவேந்திரர் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !