வடமதுரை கோயில்களில் இணை ஆணையர் ஆய்வு
ADDED :1254 days ago
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் நடக்கும் திருப்பணியை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி ஆய்வு செய்தார். பகவதி அம்மன் கோயில் முன்பாக பயனற்று கிடக்கும் கோயிலுக்கு சொந்தமான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக வடமதுரை மேற்கு ரத வீதி பத்திர பதிவு அலுவலகம் அருகில் இருக்கும் கோயிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் 28 சென்ட் இடத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆய்வு செய்தார். செயல் அலுவலர் விஜயராகவன், சுற்றுச்சூழல் ஆர்வலர் பிரசன்னா, திருப்பணி உபயதாரர்கள் உடனிருந்தனர்.