உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் அட்சய திருதியை பூஜை

கோவில்களில் அட்சய திருதியை பூஜை

தேவகோட்டை: அட்சய திருதியை முன்னிட்டு தேவகோட்டை கோதண்டராமர் கோயிலில் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு பூஜை நடந்தது. மகாலட்சுமி பூஜை நடந்தது. அதிகாலையிலேயே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நித்திய கல்யாணிபுரத்தில் உள்ள சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் காஞ்சி மகா பெரியவாளுக்கு கனகதாரா ஹோமம் நடந்தது. சவுபாக்ய துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் அம்மனுக்கு தன அலங்காரம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். புவனேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. ரங்கநாதர் பெருமாள் கோயிலில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !