உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு தடை : ஆதீனங்கள், இந்து அமைப்புகள் கண்டனம்

தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு தடை : ஆதீனங்கள், இந்து அமைப்புகள் கண்டனம்

கோவை :தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்ததற்கு, ஆதீனங்களும், ஹிந்து அமைப்புகளும் கண்டனத் தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் மிகவும் பழமையான ஆதீனம், நாகை மாவட்டம் மயிலாடு துறையில் உள்ள தருமபுர ஆதீனம். இதன் ஞானபீடாதிபதி, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.தருமபுரத்தில் நடைபெற உள்ள பட்டின பிரவேச நிகழ்ச்சியின் போது, வெள்ளிப் பல்லக்கில் ஆதீனம் வீதியுலா வருவார். அதற்கு, மாவட்ட கோட்டாட்சியர் தடை விதித்து உள்ளார்.இதற்கு தமிழகம் முழுக்க உள்ள ஆதீனங்களும், ஹிந்து அமைப்புகளும், பக்தர்களும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த சிவலிங் கேஸ்வர சுவாமிகள்: மன்னர்கள் ஆட்சி காலத்திலிருந்து தொன்று தொட்டு வரும் நடைமுறை, தமிழர்களின் கலாசாரம், பண்பாட்டுடன் கலந்தது. குருவிற்கு சிஷ்யர்கள் செய்யும் மரியாதை. இதில் யாருக்கும் எந்த கட்டாயமும் கிடையாது.கடவுள் மறுப்பு கொள்கை இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதற்கு தடை விதிப்பது நியாயமல்ல.

கோவை பேரூர் பச்சா பாளையம் பிள்ளையார்பீடம் பொன் மணிவாசக அடி களார்: இந்த விஷயத்தில் அரசோ, அரசு நிர்வாகமோ தலையீடு செய்யக்கூடாது. ஹிந்து மதம் சார்ந்த விஷயம். இதை தி.க.,வினர் எதிர்ப்பது தவறு. இந்த நடைமுறை தருமபுர ஆதீன மடத்தின் மரபு. பக்தர்களும் சிஷ்யகோடிகளும் மனமுவந்து செய்யும் நிகழ்வு.குருவை வெள்ளிப்பல்லக்கில் ஏற்றி மகிழும் நிகழ்ச்சி, குரு - சிஷ்ய பக்தி விஷயம். இது ஹிந்து சமயத்தின் நடைமுறை.

இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத்: தி.க.,வினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்தால், அதற்காக நிகழ்ச்சியை கோட்டாட்சியர் தடை செய்யக்கூடாது. ஜனாதிபதியாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை அவரது வருகையின் போது, மாணவர்கள் சாரட் வண்டியில் அமரச் செய்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
அதுபோல இந்த நிகழ்ச்சி குரு மரபு. இதற்கு அரசியல் சாயம் பூசுவது நல்லதல்ல. கோட்டாட்சியர் பிறப்பித்த தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.

இந்து முன் னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்: பல நுாற் றாண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்வுக்கு, கடவுள் மறுப்பு கொள்கை உடைய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லி தடை விதிப்பது நியாயமற்றது.பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை கோட்டாட்சியர் திரும்பப் பெற வேண்டும். ஹிந்து மதம் சம்பந்தமான விஷயத்தில் தி.க.,வினர் தொடர்ந்து இடையூறு செய்வது தேவையற்றது. இதைக் கண்டித்து, ஹிந்து முன்னணி போராட்டத்தில் ஈடுபடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !