உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 13ம் தேதி வரதர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம்

13ம் தேதி வரதர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் வரும் 13ம் தேதி அதிகாலை, 3:00 - 4:15 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முதல் நாள் காலை, தங்க சப்பரத்தில் பெருமாள் எழந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்தில் வைணவ தலங்களில் சிறப்பு பெற்று விளங்கும் வரதராஜப் பெருமாள் கோவில் வைகாசி பிரம் மோற்சவம், ஆண்டு தோறும், 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டது. நடப்பாண்டில், வரும் 13 ம் தேதி அதிகாலை, 3:00 - 4:15 மணிக்குள் கொடியேற்றத்துடன், பிரம்மோற்சவம் துவங்குகிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக, மூன்றாம் நாள் கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது. ஏழாம் நாளான 19 ம் தேதி, தேர் திருவிழா நடைபெறுகிறது.வைகாசி பிரம்மோற்சவத்தில் பெருமாள் பெரிய காஞ்சிபுரம் மற்றும் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருவிழா நிறைவு நாளன்று இரவு சின்ன காஞ்சிபுரம் பகுதிகளில் சுவாமி வீதிவுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !