உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை ஸ்ரீராமானுஜர் தேர் திருவிழா

நாளை ஸ்ரீராமானுஜர் தேர் திருவிழா

ஸ்ரீபெரும்புதுார், :ஸ்ரீபெரும்புதுாரில் நாளை ஸ்ரீராமானுஜர் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.ஸ்ரீபெரும்புதுாரில், 1017ம் ஆண்டு அவதரித்தவர், வைணவ மகான் ஸ்ரீராமானுஜர். ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், தானுகந்த திருமேனியாக ஸ்ரீராமானுஜர் அருள்பாலிக்கிறார்.ஸ்ரீராமானுஜரின் 1005வது அவதார உற்சவ விழா, ஸ்ரீபெரும்புதுாரில் ஏப்., 26ல் துவங்கி மே- 6 வரை நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா, நாளை மே 4ம் தேதி காலை கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !