திரவுபதி அம்மன் கோயில் கொடியேற்றம்
ADDED :1258 days ago
சோழவந்தான்: சோழவந்தான் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா 15 ஆண்டுகளுக்கு பின் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக மே 4 காலை 10:00 மணிக்கு திருக்கல்யாணம், மே 5 காலை 6:00 மணிக்கு வைகை ஆற்றில் கோட்டை கட்டுதல்,மே 6 கருப்பட்டியில் பீமன்-கீசகன் வதம், மே 8 முதல் 12 வரை தினமும் இரவு 8:00 மணிக்கு அம்மன் புறப்பாடு வீதி உலா நடக்கும். மே13 மாலை 4:00மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.