படவேட்டம்மன் கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி விழா
ADDED :1267 days ago
காஞ்சிபுரம்,: காஞ்சிபுரம், அம்மன் ஆர்ச் தாய் படவேட்டம்மன் கோவிலில், சித்திரை கத்திரி அக்னி தோஷ நிவர்த்தி வசந்த விழா நடந்தது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கியது.அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் மிகவும் அதிகம் இருக்கும் என்பதால், வெயிலின் தாக்கம் குறைய வேண்டி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில், அம்மன் ஆர்ச் தாய் படவேட்டம்மன் கோவிலில், அக்னி தோஷ நிவர்த்தி வசந்த விழா, நேற்று முன்தினம் நடந்தது.மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ் படையலிட்டு, மஹா தீப ஆராதனைக்கு பின், பக்தர்களுக்கு கூழ் அமுது வழங்கப்பட்டது.மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், இரவு 7:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.