அருணாசலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1273 days ago
சோழவந்தான்: சோழவந்தான் பேட்டை கிராம பச்சைநாயகி அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மே 1ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.நேற்று காலை நான்காம் கால பூஜையை தொடர்ந்து ராஜா பட்டர் தலைமையில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அர்ச்சகர் கணபதி சுப்பிரமணியம் அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனை செய்தார். ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர்.