ஆப்பனூர் அரியநாச்சி அம்மன் கோயிலில் பாலாலயம்
ADDED :1273 days ago
கடலாடி: ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அரியநாச்சி அம்மன் கோயில் பாலாலயம் கடலாடி அருகே ஆப்பனூரில் நடந்தது. பாலாலயத்தை முன்னிட்டு சிறப்பு யாக வேள்வி நடந்தது. பூஜைகளை உத்தரகோசமங்கை நாகநாத குருக்கள் செய்திருந்தார். சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் உட்பட ஆப்பனூர் கிராம பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர்.