உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் பிரமோத்ஸவம் கொடியேற்றம்

திருக்கோஷ்டியூர் பிரமோத்ஸவம் கொடியேற்றம்

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோத்ஸவம் துவக்கத்தை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடக்கிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சித்திரை பிரமோத்ஸவம் 12 நாட்கள் நடைபெறும். அதை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணி அளவில் பூர்வாங்க பூஜைகள் நடந்தன. இன்று காலை 8:00 மணிக்கு கல்யாண மண்டபத்தில் பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவியருடன் எழுந்தருளுகிறார். தொடர்ந்து கொடிமரத்திற்கு பூஜைகள் நடந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 11:00 மணி அளவில் கொடியேற்றம் நடக்கும். பின்னர் மாலையில் காப்புக்கட்டி உத்ஸவம் துவங்கும். இரவு 8:00 மணிக்கு சுவாமி தங்கப் பல்லக்கில் திருவீதி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து தினசரி வாகனங்களில் சுவாமி திருவீதி உலா இரவில் நடைபெறும். 10ம் திருநாளாக மே 14 ல் சித்திரைத் தேரோட்டமும், 12 ம் திருநாளாக மே 16 ல் புஷ்பப் பல்லக்கும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !