தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு 60% பங்குத்தொகை
ADDED :1277 days ago
சென்னை: தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டசபையில் கூறியதாவது: கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகம் செய்யப்படும். அர்ச்சனை கட்டணத்தில் அர்ச்சகருக்கு 60 சதவீத பங்கு தொகையாக வழங்கப்படும். தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த கலாச்சார மையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.