கரிவலம் கோயிலில் 2ம் தேதி பொங்கல் திருவிழா துவக்கம்
ADDED :4855 days ago
திருவேங்கடம்: கரிவலம்வந்தநல்லூர் கோயிலில் வரும் ஆக.2ம் தேதி பொங்கல் திருவிழா துவங்குகிறது. கரிவலம்வந்தநல்லூர் முத்தாலம்மன் கோயிலில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் பொங்கல் திருவிழா வரும் ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதிகளில் நடக்கிறது. 2ம் தேதி மாலை 5 மணிக்கு ராஜமேளம், நையாண்டி மேளம், பேண்ட்செட், கேரள செண்டை மேளம், தஞ்சை கரகாட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் அம்மன் அழைப்பு நடக்கிறது. பின் இரவு 12 மணிக்குள் அம்மன் கண் திறப்பு முடிந்து மேளதாள, வாணவேடிக்கையுடன் முத்தாலம்மன் திருவீதியுலா நடக்கிறது. 3ம் தேதி காலை முதல் பொங்கலிட்டு அம்மன் வழிபாடு நடக்கிறது. அன்று மாலை 4.45 மணிக்கு மேல் 6 மணிக்குள் அம்மன் வழியனுப்புதல் நடக்கிறது. ஏற்பாடுகளை கரிவலம் வந்தநல்லூர் முத்தாலம்மன் கோயில் விழாக் கமிட்டியார் செய்துள்ளனர்.