உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில், வீடுகளில் வரலட்சுமி நோன்பு கொண்டாட்டம்!

கோவில், வீடுகளில் வரலட்சுமி நோன்பு கொண்டாட்டம்!

ஈரோடு: ஆடிமாத பிறப்பை அடுத்து, கோவில் மற்றும் வீடுகளில், பெண்கள் கூடி, கணவனின் ஆயுள் நீடிக்கவும், திருமாங்கல்யம் நிலைக்கவும், உலக நன்மைக்காக, வரலட்சுமி நோன்பு, வழிபாட்டை நேற்று மேற்கொண்டனர்.ஈரோடு நகரில், பெருமாள் கோவில், அம்மன் கோவில்களில் மற்றும் வீடுகளில் வரலட்சுமி நோன்பு கொண்டனர். நோன்பை முன்னிட்டு, பெண்கள் விரதம் இருந்து, ஒன்பது லட்சுமியை கணக்கிட்டு, ஒன்பது சுமங்கலிகள் கூடி, நேற்று வரலட்சுமி நோன்பு வழிபாடும், கோவில்களில் சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது.விரதம் இருந்து வழிபாட்டில் ஈடுபட்ட பெண்களுக்கு, வழிபாட்டுக்கு பின், புதுத்துணி, வளையல், குங்குமம், பூ மற்றும் நோன்பு கயறு (மஞ்சள் கயறு) வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு கோவில்களில் பிரசாதமும், வீடுகளில் வழிபாட்டில் கலந்துகொண்ட பெண்களுக்கு விரதத்தை நிவர்த்தி செய்ய, பிரசாதத்துடன் உணவும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !