இன்று அன்னை ஈஸ்வரம்மா தினம்
இந்த உலகில் பெற்ற தாய்க்கு இணையாக வேறு யாரும் இல்லை. இதனால்தான் பலர் ஈன்ற தாயை தெய்வமாக நினைத்து வாழ்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ சத்ய சாயிபாபா மன்றத்தின் சார்பில் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவைப் பெற்றெடுத்த தெய்வீக அன்னையாகிய ஈஸ்வரம்மா அவர்களின் தினம் கொண்டாடப்படுகிறது.
ஈஸ்வரம்மா, அன்பும் , அடக்கமுமே உருவான அவர், நம் சத்ய சாயிபாபா அவர்களின் போதனைகளுக்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்த ஒரு உன்னதத் தாய். ஸ்வாமியின் கல்வி, மருத்துவம் மற்றும் குடிநீர் சேவைகளுக்குக் காரணமானவர். இப்பிரபஞ்சத் தாயின் அன்பு, நிபந்தனையில்லாமல் அனைவரையும் அரவணைத்தது. அன்னையே மனிதனுக்கு முதல் குரு என்று பலமுறை ஸ்வாமி வலியுறுத்தி உள்ளார். அங்ஙனம் வாழ்ந்து காட்டிய நம் இறையன்னையைப் போற்றும் விதமாக, அவருடைய நினைவு தினமான மே 6-ந் தேதி, 1977-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஈஸ்வரம்மா தினமாகக் சாயிபாபா பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.