உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒப்பில்லாமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

ஒப்பில்லாமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


காரைக்கால்: காரைக்காலில் ஒப்பில்லாமணியர் வேதபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

காரைக்கால் வடமறைக்காடு பகுதியில் உள்ள செளந்தரம்பாள் சமேத ஒப்பில்லாமணியர் சுவாமி வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 29ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.அதை தொடர்ந்து நேற்று முன்தின் பரமசிவன், பார்வதி திருமண நிகழ்ச்சி மஹாமுனிவர் அகத்தியர் முன்னிலையில் திருமண நிகழ்ச்சி மிகவிமர்ச்சியாக நடைபெற்றது. முன்னதாக வேதமந்திர முழுங்க வாத்தியத்துடன் சிவச்சாரியார்கள் பரமசிவன்,பார்வதி திருமணம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக திருக்கல்யாணத்தை முன்னிட்டு உச்சி மாகாளியம்மன் கோவிலிருந்து வரிசை ஊர்வலமாக எடுத்துகொண்டு ஆலையம் வந்தடைந்தனர். இரவு ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியில் திருமுருகன் எம்.எல்.ஏ.,உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !