துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :1273 days ago
சிவகாசி: சிவகாசி ஆட்டோ ஸ்டாண்டு துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அரசு, வேம்பு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. காலையில் நகரில் சீர்வரிசை கொண்டு சுற்றி வந்தனர் தொடர்ந்து அரசுக்கும் வேம்புக்கும் திருக்கல்யாணம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் மஞ்சள் கயிறு கிழங்கு கல்யாண வளையல் கட்டி விட்டனர் குழந்தை வரம் கிடைக்க பக்தர்கள் மஞ்சள் கயிற்றில் கிழங்கு, வளை காப்பு வளையல் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.