திருப்பதி ஏழுமலையானுக்கு லாரி நன்கொடை
ADDED :1272 days ago
திருப்பதி, திருமலை ஏழுமலையானுக்கு, அசோக் லேலண்ட் நிறுவனம் நேற்று லாரியை நன்கொடையாக வழங்கி உள்ளது.
திருமலை ஏழுமலையானுக்கு, சென்னையைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், தன் புதிய தயாரிப்பு வாகனங்களை நன்கொடையாக அளித்து வருகிறது. அதன்படி தற்போது புதிதாக தயாரித்த 18.38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மினி லாரியை, நேற்று காலை நன்கொடையாக அசோக் லேலண்ட் நிறுவனம் வழங்கியது. அந்நிறுவன மூத்த துணைத் தலைவர் சஞ்சீவ் குமார், ஏழுமலையான் கோவில் வாயிலில் லாரிக்கு வாழை மரம் கட்டி, மலர் மாலை அலங்கரித்து, மஞ்சள், குங்குமம் வைத்து பழங்கள் சமர்ப்பித்து, தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி காட்டினார். பின், அதற்கான சாவி மற்றும் ஆவணங்களை தேவஸ்தான அதிகாரிகளிடம் சஞ்சீவ் குமார் வழங்கினார்.