சென்னை அம்மன் கோயில்களில் ஆடித் திருவிழா கோலாகலம்!
ADDED :4918 days ago
சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடித் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.கொரட்டூர் நாகவல்லி அம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முதுகில் அலகு குத்தி, ராட்டின காவடி, பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.