உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சுப்ரமணியர் கோவிலில் மண்டல பூஜை துவக்கம்

வால்பாறை சுப்ரமணியர் கோவிலில் மண்டல பூஜை துவக்கம்

வால்பாறை : வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிேஷக மண்டல பூஜை நேற்று துவங்கியது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிேஷகம் நேற்று முன்தினம் நடந்தது. மாலையில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் திருக்கல்யாணம் நடந்தது.மண்டல பூஜை முதல் நாளான நேற்று காலை, 8:00 மணிக்கு முருகனுக்கு, சிறப்பு அபிேஷக ஆராதனையும், அலங்கார பூஜையும் நடந்தது. காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா, முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் வள்ளிக்கண்ணு தலைமையில் நடந்தது.நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் சுரேஷ்குமார், வனச்சரக அலுவலர் வெங்கடேஷ், கவுன்சிலர் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர். விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !