கடற்கரையில் கரை ஒதுங்கியது விநாயகர் சிலை
ADDED :1284 days ago
எண்ணுார், எண்ணுார் கடற்கரையில் கரை ஒதுங்கிய விநாயகர் சிலை குறித்து, விசாரணை நடக்கிறது.அசானி புயல் சின்னம் காரணமாக திருவொற்றியூர், எண்ணுார், காசிமேடு பகுதிகளில் நேற்று, கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.இந்நிலையில், எண்ணுார் கே.வி.குப்பம் கடற்கரை பகுதியில், 2 அடி உயர விநாயகர் சிலை, திடீரென கரை ஒதுங்கியது.இதைப் பார்த்த மீனவர்கள், எண்ணுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் விரைந்து வந்து, விநாயகர் சிலையை கைப்பற்றி, திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் ஏற்கனவே கடலில் வீசிய சிலை கரை ஒதுங்கியதா? அல்லது யாராவது கரையில் வீசிவிட்டுச் சென்றனரா என விசாரிக்கின்றனர்.