பத்ரகாளியம்மன் கோயிலில் கயர் குத்து திருவிழா
ADDED :1442 days ago
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கயர் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் தங்களது உடம்பு முழுவதும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வேடமிட்டு கோஷமிட்டு வந்தனர். உடம்பில் கயர் குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். சுவாமிகளை முளைப்பாரி வடிவில் துாக்கி ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு உருண்டு கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. அம்மன் புஷ்ப பல்லக்கில் திரு வீதி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னிட்டு பட்டாசு ஆலைகள், நிறுவனங்கள், பெரும்பான்மையான கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.