நாகபூண்டி நாகேஸ்வரர் கோவில் தேர் திருவிழா
ADDED :1284 days ago
ஆர்.கே.பேட்டை: நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரிய நாகபூண்டியில் அமைந்துள்ளது நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரர் கோவில். ராகு பரிகார தலமான இந்த கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் கருவறையில் மூலவரை சுற்றிலும் தொடர்ந்து ஊற்று நீர் சுரந்து கொண்டிருப்பது சிறப்பு. இந்த கோவிலின் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி துவங்கியது. நேற்று, தேரில் வலம் வந்தார். திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இன்று இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. வரும், 18ம் தேதி விழா நிறைவு பெறுகிறது.