நவநீத கிருஷ்ணசாமி கோவில் திருப்பணி
ADDED :1284 days ago
சென்னை:தென்காசி மாவட்டம் நவநீத கிருஷ்ணசாமி கோவிலில், கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:தென்காசி தொகுதி, நவநீத கிருஷ்ணசாமி கோவில், தெய்வீக அதிர்வுகள் நிறைந்த கோவில். பாண்டிய மன்னர்கள் காலத்தில், மதுரைக்கு தெற்கே உருவாக்கப்பட்ட முதல் வைணவக் கோவில். இக்கோவிலில், 103 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்கவில்லை. கோவிலில் திருப்பணி செய்ய, தொல்லியல் துறையிடம் கருத்துரு பெறப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடத்த, நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற கோவில்களிலும் திருப்பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.