உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி ஜெயந்தி விழா

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி ஜெயந்தி விழா

சின்னசேலம் : சின்னசேலத்தில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி ஜெயந்தி விழாவையொட்டி பால் குட ஊர்வலம் நடந்தது. அதனையொட்டி நேற்று காலை சக்தி கரம் அழைத்தும், பால்குடம் ஏந்தியும் ஊர்வலம் சென்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது.அங்கு, நடந்த வேள்வி பூஜையில் 108 வலம்புரி சங்கில் மூலவருக்கு அபிஷேகம், மற்றும் பாலாபி ேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு உற்சவர் சுவாமி வீதியுலா நடந்தது. வாசவி வனிதா கிளப் மாவட்ட அவை செயலாளர் பாலமுருகன், நிர்வாக தலைவர் ரவிந்திரன் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !