திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்
ADDED :1286 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் நேற்று துவங்கியது. கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் மோர் வழங்கப்படுகிறது. கோயில் துணை கமிஷனர் சுரேஷ் துவக்கி வைத்தார். வெயில் தாக்கம் குறையும்வரை கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் மோர் வழங்கப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.