சென்னகேசவர் சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான ஊரந்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தேவி-பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவர் சுவாமி தேவஸ்தானத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று 12ம் தேதி சென்னகேசவர் கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரம் அருகில் சிறப்பு கலசங்களை ஏற்பாடு செய்ததோடு கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர் அதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்த பின்னர் மேளதாளங்களோடு மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு, கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு ,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் , மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பிரம்மோற்சவத்தில் 14.5 .2022 இரவு 8" மணிக்கு அனுமந்த வாகனத்தில் சுவாமி அம்மையார்கள் ஊர்வலம் நடைபெறும். 16ஆம் தேதி இரவு கருட வாகனத்தில் சாமி ஊர்வலம் நடைபெறும். 17ஆம் தேதி இரவு சுவாமி அம்மையார்களின் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் .19ஆம் தேதி இரவு பல்லக்கு சேவை 20ஆம் தேதி சக்கர ஸ்நானம் 21 ஆம் தேதி ஏகாந்த சேவையுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுவதாக சிவன் கோயில் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தெரியப்படுத்தினார்.