உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பிரதோஷம் விழா

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பிரதோஷம் விழா

மேட்டுப்பாளையம்: வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பிரதோஷம் விழா நடந்தது.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு நேற்று மாலை, பிரதோஷம் விழா நடந்தது. வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு பால் தயிர், மஞ்சள், திருமஞ்சள், சந்தனம், பன்னீர், எலுமிச்சை, தேன், நெய், இளநீர், பஞ்சாமிர்தம், பச்சரிசி மாவு, விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு சிறப்பு அலங்காரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !