உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரும்பை கோயிலில் பிரதோஷ விழா

இரும்பை கோயிலில் பிரதோஷ விழா

வானூர்: இரும்பை மகாகாளேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.

திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலமான பல ஆண்டுகள் பழமை வாய்ந்த விழுப்புரம் மாவட்டம் இரும்பை மகாகாளேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை நடந்த பிரதோஷ விழாவையொட்டி, மூலவர் மகாகாளேஸ்வரர், அம்பாள் மது சுந்தரநாயகி (என்கிற) குயில் மொழியம்மைக்கு மற்றும் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சுவாமி மாகாளேஸ்வரர்,மது சுந்தரநாயகியுடன் சமேதராக நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !