நரசிம்மர் ஜெயந்தி வழிபாடு : சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்
ADDED :1353 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் நரசிம்மர் ஜெயந்தி வழிபாடு நடந்தது. பால், மஞ்சள், தயிர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. சுவாமிக்கு மலர்களால் அர்ச்சனை செய்தனர். பக்தர்களுக்கு பானகரம், பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்தது.