உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களிமேடு தேர் விபத்து: 18 நாட்களுக்கு பிறகு தேரில் இருந்த அப்பர் சிலைக்கு பரிகார பூஜை

களிமேடு தேர் விபத்து: 18 நாட்களுக்கு பிறகு தேரில் இருந்த அப்பர் சிலைக்கு பரிகார பூஜை

தஞ்சாவூர் : களிமேடு தேர் விபத்து நடந்து 18 நாட்கள் ஆனநிலையில், தேரில் இருந்த அப்பர் சிலை எடுக்கப்பட்ட பல்வேறு பரிகார பூஜை,சிறப்பு அபிஷேகம் செய்யப்பட் மடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில், 94வது ஆண்டு அப்பர் தேர் திருவிழா கடந்த 26ம் தேதி இரவு துவங்கியது. தொடர்ந்து 27ம் தேதி அதிகாலை தேர் மின்கம்பியில் உரசி விபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் பலியாகினார். சுமார் 14 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள், ஆன்மீகவாதிகள், ஆதீனங்கள் கிராமமக்களை சந்தித்து ஆறுதல் கூறி சென்றனர்.  தொடர்ந்து, விபத்து நடந்த தேரிலேயே ஐம்பொன்னாலான அப்பர் சிலை, 300 ஆண்டு பழமையான ஓவியமும் சேதமில்லாமல் இருந்த நிலையில், நேற்று இரவோடு 18 நாட்களுக்கு பிறகு, தேரில் இருந்து அப்பர் சிலைக்கு  விக்கேனஸ்வர பூஜை,சங்கல்பம், புண்யாகவாசனம்,மஹாலெட்சுமி பூஜை, அஷ்டதிக் பூஜைகள் பிரேவசபலி செய்து அப்பர் சிலையை மடத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் இன்று(15ம் தேதி) காலை 7:00 மணி முதல் 10:30 மணி முதல் அப்பர் சுவாமிக்கு ஸ்தபன பூஜை,பஞ்ச அஸ்தர பூஜை ஹோமம், கலசாபிஷேகம், பால்,மஞ்சள்,திரவிய பொடி உள்ளிட்ட 16 மங்கள பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டன. இதில் கிராமமக்கள் அப்பர் சுவாமியை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து பஞ்சபுராணமான தேவாரம், திருவாசகம் பாடி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !