கமுதி அருகே தர்ம முனிஸ்வரர் கோயில் பொங்கல்விழா
ADDED :1260 days ago
கமுதி: கமுதி அருகே கொம்பூதி கிராமத்தில் தர்மமுனிஸ்வரர் கோயில் 10ம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். இந்நிலையில் கோயில் முன்பு பக்தர்கள் கிடா வெட்டி, பொங்கல்வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.பின்பு மூலவரான தர்மமுனிஸ்வரர் பால்,சந்தனம், பன்னீர் உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்புபூஜைகள் நடந்தது. தர்மமுனிஸ்வரர் வெள்ளிக்கவசம் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடந்தது. கிராமமக்கள் சார்பில் பொது அன்னதானம் வழங்கப்பட்டது. பொங்கல் விழாவில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.