உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்

ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்

சிவகாசி: சிவகாசி அருள்மிகு ஐயப்பன் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஐயப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. முதல் இரு நாட்கள் கணபதி ஹோமம் , நவகிரஹ ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ,கோ பூஜை யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று முன்தினம் விசேஷ சந்தி இரண்டாம் கால யாக பூஜை, 3 ம் கால யாக பூஜை, அஸ்வ பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று காலை பக்தர்கள் பால்குடம், நெய் குடம் எடுத்து நகர்வலம் சுற்றி வந்தனர். பின்னர் சுவாமி ஐயப்பன், பரிவார மூர்த்திகளாக விநாயகர் ,முருகன், தட்சிணாமூர்த்தி, மஞ்சள்மாதா, விஷ்ணு துர்க்கை, ஆஞ்சநேயர், நவகிரகங்கள், கடுத்த சாமி, கருப்பசாமி, பைரவர் ஆகிய மூர்த்திகளுக்கும், ராஜகோபுரத்திற்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அனைத்து மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி நகர்வலம் வந்து அனைத்து பக்தர்களுக்கும் அருள் பாவித்தார். ஏற்பாடுகளை சிவகாசி அருள்மிகு ஐயப்பன் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !