பழநி காமாட்சி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :1353 days ago
பழநி: பழநி இந்திராநகர் காமாட்சி அம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. காமாட்சி அம்மன் கோயில் வைகாசி திருவிழா மே8ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று ஏகாம்பரநாதருக்கும், காமாட்சி அம்மனுக்கும் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.