கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோவில் விழா
ADDED :1250 days ago
கொடைக்கானல்: கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா இரு வாரத்திற்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் மண்டகப்படி, அம்மன் பவனி வருதல், பூ பல்லாக்கு ஊர்வலம், சக்தி கரகம் எடுத்தல், மாவிளக்கு, அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து அக்னிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், பறவைக்காவடி எடுத்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.