உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை உச்சி மாகாளியம்மன் கோவில் திருவிழா

உடுமலை உச்சி மாகாளியம்மன் கோவில் திருவிழா

உடுமலை: உடுமலை சீனிவாசா வீதி, உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து, வழிபட்டனர். கடந்த 3ம் தேதி நோன்பு சாட்டுதல்
நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம், தோட்டத்து விநாயகர் கோவிலில் இருந்து, சக்தி கும்பம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை பக்தர்கள், ஊர்வலமாக விளக்கு
எடுத்து வந்தனர். மாலை பூவோடு எடுத்தனர். உச்சிமாகாளியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இன்று, இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா , மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை , மாலை, 4:30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிேஷகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !