நாளை கோயிலை அடைகிறார் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள்
ADDED :1246 days ago
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழாவில் நாளை பெருமாள், திருக் கோயிலை அடைகிறார்.
இக்கோயில் வசந்த உற்சவ விழாவையொட்டி, பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்கி மண்டகப்படிகளில் சேவை சாதித்து வருகிறார். தொடர்ந்து நேற்று இரவு மாணிக்கா மண்டகப்படியில் அனுமன் வாகனத்திலும், தொடர்ந்து இரவு அவதார சேவையில் அருள்பாலித்தார். இன்று காலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மாலை கள்ளழகர் திருக்கோலத்தில் அருள் பாலிப்பார். தொடர்ந்து பூப்பல்லக்கில் வைகையில் இருந்து எழுந்தருளும் பெருமாள், எமனேஸ்வரம் முக்கிய வீதிகளில் வலம் வந்து, நாளை காலை 10:00 மணிக்கு மேல் திருக் கோயிலை அடைகிறார். இரவு கண்ணாடி சேவையில் அழகர் அருள் பாலிக்க உள்ளார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபையினர் செய்துள்ளனர்.