வட்டெழுத்து கல்வெட்டு திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு
ADDED :1249 days ago
திருப்பூர்: திருப்பூர் அருகே பரஞ்சேர்வழி கோவிலில், 1,038ம் ஆண்டின் வட்டெழுத்து கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:பரஞ்சேர்வழியில் சைவம், வைணவம், சமண மதங்கள் வளர்ந்திருந்தன. சமணப்பள்ளி இருந்ததற்கான சான்றாக, 10ம் நுாற்றாண்டை சேர்ந்த தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் உள்ளது.கோவிலில் கண்டறியப்பட்ட வட்டெழுத்து கல்வெட்டு வாயிலாக, சமணப்பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வந்தது தெரிய வருகிறது.இக்கல்வெட்டு, 1,004 முதல், 1,047 வரை ஆட்சி செய்த, கோனாட்டு அரசர்களில், மூன்றாவது அரசன் விக்கிரம சோழன் காலத்தை சேர்ந்தது. 17 வரிகள் உள்ள கல்வெட்டு, 30 செ.மீ., அகலமும், 90 செ.மீ., உயரமும் கொண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.