மடக்கோட்டை முனீஸ்வரர் கோவில் விழா துவக்கம்
ADDED :1574 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் மடக்கோட்டை முனீஸ்வரர் கோவில், வைகாசி விழா, நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முன்னதாக மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டன. விழாவின் தொடர்ச்சியாக மே 26 ல், பக்தர்கள் பூத்தட்டு எடுத்து, பூச்சொரிதல் விழாவும், மறுநாள் முக்கிய விழாவான பூக்குழி விழா நடைபெறுகிறது. அன்றைய தினத்தில், விரதமிருந்த பக்தர்கள் காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். மே 28ல், நடைபெறும் கிடாவெட்டு விழாவுடன் முனீஸ்வரர் கோவில் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி கருப்பதேவர் செய்து வருகிறார்.