உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னத்தூர் பொன் காளியம்மன் திருவிழா ‌: பக்தர்கள் குண்டம் இறங்கினர்

குன்னத்தூர் பொன் காளியம்மன் திருவிழா ‌: பக்தர்கள் குண்டம் இறங்கினர்

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரில் புகழ் பெற்ற பொன்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா கடந்த 4 ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

நேற்று 19 ந் தேதி அதிகாலை பாரியூர் கோண்டத்துகாளியம்மனை அழைத்து வருதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், பெண்கள் உட்பட நூற்று கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து, 11 மணிக்கு ரத ஆரோகணம், மாலை 4 மணிக்கு ரத உற்சவம் உள்ளிட்டவை நடைப்பெறுகிறது. நாளை 20 ந் தேதி மாலை ரதம் நிலை சேருதல், 21 ந் தேதி இரவு அம்மன் அலங்கார முத்து பல்லக்கில் திரு வீதி உலா வருதல், 22 ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் திரு வீதி உலா வருதல், 23 ந் தேதி காலை மஞ்சள் நீர் உற்சவம், 24 ந் தேதி மறு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !