திருப்புவனம் வைகை ஆற்றில் சேதமடைந்த பைரவர் சிலை கண்டெடுப்பு
ADDED :1329 days ago
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் சேதமடைந்த பைரவர் சிலை கண்டெடுக்கப்பட்டதையடுத்து அப்பகதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். திருப்புவனம் வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்கள் வைகை ஆற்றினுள் தர்ப்பண பொருட்களை புதைக்க பள்ளம் தோண்டிய போது நான்கு அடி உயரம் கொண்ட கல்லால் ஆன சேதமடைந்த கற்சிலை கண்டெடுத்து வழிபட்டு வருகின்றனர். தகவலறிந்தும் வருவாய்துறையினர் சிலையை கைப்பற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சேதமடைந்த சிலைகளை ஆற்றினுள் புதைப்பது வழக்கம், அந்த வகையில் இந்த சிலையையும் புதைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.