உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாஞ்சாலியம்மன் கோவிலில் தேரோட்டம்

பாஞ்சாலியம்மன் கோவிலில் தேரோட்டம்

புதுச்சேரி: திலாசுப்பேட்டை தருமராச பாஞ்சாலியம்மன் கோவில் விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. திலாசுப்பேட்டை தருமராச பாஞ்சாலியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 18ம் தேதி துவங்கியது. கடந்த 15ம் தேதி கொடியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் தபசு திருவிழா, இரவு பாஞ்சாலியம்மன் குதிரை வாகனத்தில் வீதியுலா நடந்தது .
நேற்று தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். பாஞ்சாலியம்மன் திருத்தேரை முதல்வர் ரங்கசாமி வடம் பிடித்து இழுத்து தரினசம் செய்தார்.இன்று மஞ்சள் நீர் உற்சவம், நாளை 22ம் தேதி தருமருக்கு திருமுடி செங்கோல் ஏந்தி ராஜ்ய பட்டாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !