உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவில் தீமிதி அய்யப்பன் எம்.எல்.ஏ., தரிசனம்

திரவுபதியம்மன் கோவில் தீமிதி அய்யப்பன் எம்.எல்.ஏ., தரிசனம்

கடலுார்:வில்வராயநத்தம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி பிரம்மோற்சவத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ., சாமி தரிசனம் செய்தார். கடலுார், வில்வராயநத்தம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி பிரம்மோற்சவம் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை அரவாண் புறப்பாடு, மதியம் ரக்ஷாபந்தனம் நடந்தது.


மாலை தீமிதி உற்சவம் நடந்தது.பக்தர்கள் திரளாக பங்கேற்று தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில், அய்யப்பன் எம்.எல்.ஏ., டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவரும், 3வது வார்டு கவுன்சிலருமான பிரகாஷ், மகாலட்சுமி கல்விக்குழும நிறுவனர் ரவி, கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், கூட்டுறவுத் துறை கிருஷ்ணராஜ், ராமலிங்கம், விஜயகுமார், முன்னாள் கவுன்சிலர் சேகர், சம்பந்தம், சுரேஷ், தீனதயாளன், பாஸ்கரன், மணிகண்டன், வசந்தராஜன், பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திரவுபதியம்மன் கோவில் தலைவர் அருணாசலம், நிர்வாக செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ரமேஷ், நிர்வாக இணை செயலாளர் திருமால்ராஜ் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !